மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 22 Jan 2021 3:54 AM IST (Updated: 22 Jan 2021 3:54 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், ஜீவானந்தம், ராஜேந்திரன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

10 அம்ச கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டம் என்பன உள்ளிட்ட முக்கிய திட்டப்பணிகள் மீதான நெருக்கடிகளை அரசு கைவிட வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மாநில அளவிலான அனைத்து நிலை பதவி உயர்வு அறிக்கையின் பதிவை வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் அனைத்தையும் முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருந்தாளுநர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சங்க முன்னாள் மாநில பொருளாளர் நாகராஜன், மாவட்ட இணை செயலாளர் கலா, முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story