கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2021 5:27 AM IST (Updated: 22 Jan 2021 5:27 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க இணை செயலாளர் ஜார்ஜ்வாஷிங்டன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ரஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மீதான நெருக்கடிகளை கைவிட வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வடிவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன், மாவட்ட இணைச்செயலாளர் சாமிதுரை மற்றும் வீரபத்திரன், முருகேசன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

Next Story