கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2021 5:33 AM IST (Updated: 22 Jan 2021 5:33 AM IST)
t-max-icont-min-icon

கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று ஒலக்கூர் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

திண்டிவனம்,

ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் ரங்கநாதன், சீனு, ராஜேந்திரன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

பகல் கனவு

அப்போது அவர் பேசியதாவது:- வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் கடுமையாக உழைத்து எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க வேண்டும். தி.மு.க.வினர் ஏதாவது கவர்ச்சி திட்டங்களை கூறி மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏழைகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் தருகிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றினார். அதேபோல் மு.க.ஸ்டாலினும் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என்று பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மக்பூல்பாய், பன்னீர், பாண்டுரங்கன், பாலகிருஷ்ணன், பெருமாள், ராமமூர்த்தி, ரமேஷ், குமார், சந்திரசேகரன், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story