கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் பாராட்டு


கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 22 Jan 2021 6:30 AM IST (Updated: 22 Jan 2021 6:30 AM IST)
t-max-icont-min-icon

கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டை பொதுமக்கள் பாராட்டினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தினமும் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த மனுக்களை பெற்று அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்றும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

அவ்வாறு வந்தவர்களில் 2 மாற்றுத்திறனாளி பெண்களும் இருந்தனர். அந்த பெண்களால் நடக்க முடியாத நிலையில் கீழ் தளத்தில் அமர்ந்திருந்தனர்.

மனுக்கள் வாங்கினார்

அந்த சமயத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முதல் தளத்தில் போலீசாருடனான ஆலோசனை கூட்டத்தில் இருந்தார். இந்த நிலையில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்கள் மனு அளிப்பதற்காக காத்திருப்பதை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உடனடியாக கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து தரைதளத்துக்கு வந்தார்.

அங்கு காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனுவை வாங்கி குறைகளை கேட்டார். பின்னர் அவர்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அவருடைய செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா்.

Next Story