5 முதல் 12-ம் வகுப்பு வரை தானே புறநகரில் 27-ந் தேதி பள்ளிகள் திறப்பு
தானே புறநகரில் 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
மும்பை,
மராட்டியத்தில் பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளை திறக்கப்படாமல் உள்ளது.
இந்தநிலையில் தானே புறநகரில் வருகிற 27-ந் தேதி முதல் 5 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை தானே மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிறப்பித்து உள்ளார்.
திறப்பு இல்லை
அதேநேரத்தில் தானே மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகளை திறப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராஜேஸ் நர்வேகர் கல்வி நிறுவனங்களை அறிவுறுத்தி உள்ளார்.

Related Tags :
Next Story