சேலம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்


சேலம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 23 Jan 2021 4:17 AM IST (Updated: 23 Jan 2021 4:25 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம்
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வந்த 5 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வெங்கட்ரமணன் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் 
விடுப்பில் உள்ள ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தணிக்கை பிரிவு கண்காணிப்பாளராகவும், கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் (கிராம ஊராட்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இட மாறுதல் செய்யப்பட்டனர். 
கலெக்டர் உத்தரவு
மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தணிக்கை பிரிவு கண்காணிப்பாளர் அருள்பாரதி கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றிய செந்தில் கெங்கவல்லி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ராமன் பிறப்பித்தார்.

Next Story