மாவட்ட செய்திகள்

தந்தை திட்டியதால் மகன் தற்கொலை + "||" + Son commits suicide after father insults him

தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

தந்தை திட்டியதால் மகன் தற்கொலை
ஆரல்வாய்மொழி அருகே தந்தை திட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி வடக்கூர் கீழத் தெருவை சேர்ந்தவர் முருகன். சலவை தொழிலாளி. இவருடைய மனைவி நாகம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர்.

மூத்த மகன் தென்கரை மகாராஜன் (வயது 22) டிப்ளமோ படித்து விட்டு, கடந்த ஒரு வருடமாக ஆரல்வாய்மொழியில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த பொங்கல் தினத்தில் இருந்து தென்கரை மகாராஜன் சரியாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் புதிய வேலைக்கு அவர் முயற்சித்ததாகவும் தெரிகிறது. இதனை அறிந்த முருகன், தென்கரை மகாராஜனை திட்டியதாக கூறப்படுகிறது.


மகன் தற்கொலை

இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். முருகனுக்கு செண்பகராமன்புதூர் மரப்பாலம் அருகே பி.சி. காலனியில் ஒரு வீடும் உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று அங்கு சென்ற தென்கரை மகாராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை.
2. நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்து கொன்று வியாபாரி தற்கொலை தீயில் கருகிய மகளுக்கு தீவிர சிகிச்சை
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை உயிருடன் தீவைத்து எரித்து கொன்று விட்டு இரும்பு வியாபாரியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதை தடுக்க வந்த மகள் பலத்த தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
3. திருத்தணி அருகே கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருத்தணி அருகே கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பணியின் போது தவறு செய்ததால் அதிகாரிகள் ‘மெமோ’: மனமுடைந்த மாநகர பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
பணியின்போது ஏற்பட்ட தவறால் அதிகாரிகள் ‘மெமோ’ வழங்கியதையடுத்து, மனமுடைந்த மாநகர பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. மாங்காடு அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மாங்காடு அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை