நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 24 Jan 2021 4:20 AM IST (Updated: 24 Jan 2021 4:20 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

வள்ளியூர்,

சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வள்ளியூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. சார்பில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் கிரகாம்பெல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் வள்ளியூர் நகர செயலாளர் சேதுராமலிங்கம், ஒன்றிய அவைத்தலைவர் சிவராமகிருஷ்ணன், மூத்த நிர்வாகி சிவனுபாண்டியன், வள்ளியூர் யூனியன் முன்னாள் துணைத்தலைவர் ஆதிபரமேஸ்வரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி, வள்ளியூர் ஆதிபாண்டி, பாலகிருஷ்ணா பள்ளி தாளாளர் திவாகர், மாவட்ட பிரதிநிதிகள் காதர்மைதீன், முத்துராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.ம.மு.க.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மகாராஜநகரில் நேதாஜி பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கு நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, தொண்டர் அணி செயலாளர் மணிமாறன், பேராசிரியர் ராமசாமி, நிர்வாகிகள் சுரேஷ் பாண்டியன், சர்மிளா, சுபாஷ் பாண்டியன், அஜித்குமார், சிவசங்கர், பிரசாந்த், மணி செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் திருமாறன் தலைமை தாங்கினார். முதல்வர் எழிர்வாணன், நேதாஜி பற்றி பேசினார். ஆசிரியை சோபியா, மாணவிகள் பிரியா, வஜ்ரலட்சுமி, ஹர்ஷினி ஆகியோர் சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு குறித்து பேசினார்கள்.

அம்பை

அம்பை பூக்கடை பஜாரில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பேச்சிமுத்து பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் தங்கம் ராஜகோபால், வக்கீல் சங்க தலைவர் கந்தசாமி, வக்கீல் காந்திமதிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லிடைக்குறிச்சி சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் அலங்கரிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிர்வாகி தங்கமாரி, மாவட்ட தலைவர் செந்தில்குமார், மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் துரை பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆழ்வார்குறிச்சி

ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர் ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு கடையம் கிழக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ஒன்றிய தலைவர் ரத்தினகுமார், ெபாதுச்செயலாளர் முருகேசன், துணை தலைவர் சுரேஷ்குமார், விவசாய அணி முருகேஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story