கோடம்பாக்கத்தில் கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் பணம், செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது


கோடம்பாக்கத்தில் கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் பணம், செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2021 4:46 AM IST (Updated: 24 Jan 2021 4:46 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 17), நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் அததீப் (17), தேனி மாவட்டம் ஓடபட்டியை சேர்ந்தவர் அழகேஸ்வரன் (17).

இவர்கள் 3 பேரும் செங்கல்பட்டில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் படித்துவிட்டு, தியாகராயநகரில் உள்ள ஓட்டலில் பயிற்சி பணியில் சேர்ந்தனர். அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

இவர்கள் 3 பேரும் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் இவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 செல்போன்கள், ரூ.21 ஆயிரத்து 500, ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை பறித்து சென்றது. இதுதொடர்பாக 3 பேரும் பாண்டிபஜார் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் இது தங்கள் எல்லை இல்லை என்றுகூறி நுங்கம்பாக்கம் போலீஸ்நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் காமராஜர் காலனி 5-வது தெருவை சேர்ந்த நரேஷ் (20), ஸ்டீபன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

Next Story