மயானத்துக்கு செல்ல பாலம் இல்லாததால் இறந்தவரின் உடலை சுமந்தபடி ஆற்றை கடக்கும் மக்கள் தென்காசி அருகே அவலம்
தென்காசி அருகே மயானத்துக்கு செல்ல பாலம் இல்லாததால், இறந்தவரின் உடலை சுமந்தபடி ஆற்றை கடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
தென்காசி,
தென்காசி அருகே சாம்பவர்வடகரையில் யாதவ சமுதாயத்தினருக்கான மயானம் அங்குள்ள அனுமன்நதியை கடந்து வடபுறத்தில் அமைந்துள்ளது.
இதனால் அந்த சமுதாயத்தில் யாரேனும் இறந்தால், அவரது உடலை சுமந்தபடி பொதுமக்கள் அனுமன்நதியை கடந்து மயானத்துக்கு சென்று தகனம் செய்கின்றனர்.
பாலம் அமைக்க கோரிக்கை
மழைக்காலத்தில் அனுமன்நதியில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது, இறந்தவரின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சம்பவத்தன்று அப்பகுதியில் இறந்த ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக, அவரது உடலை சுமந்தபடி அனுமன்நதியில் இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் தத்தளித்து சென்றனர்.
எனவே சாம்பவர்வடகரையில் அனுமன்நதியை கடந்து மயானத்துக்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும். அல்லது மாற்று இடத்தில் மயானம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story