வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2021 2:15 AM GMT (Updated: 24 Jan 2021 2:15 AM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை அவுரி திடலில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி, அரசு போக்குவரத்து கழக மாவட்ட தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களை பாதிக்கும் எந்த சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரக்கூடாது.

சுமூக தீர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story