டிக்-டாக் மூலம் அறிமுகம்; 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைதானார்


டிக்-டாக் மூலம் அறிமுகம்; 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைதானார்
x
தினத்தந்தி 24 Jan 2021 11:18 AM IST (Updated: 24 Jan 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

டிக்-டாக் மூலம் அறிமுகமான 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிறுமி மாயம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை கடந்த 17-ந் தேதி இரவு முதல் காணவில்லை என சிறுமியின் தாயார், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இது தொடர்பாக சிறுமியை கடத்தியதாக குரோம்பேட்டை ராதாநகர் ராஜாஜி தெருவை சேர்ந்த கவுதம் (வயது 19) என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்,

பாலியல் தொல்லை
அதில் கவுதம், டிக்-டாக் என்ற செல்போன் செயலி மூலம் சிறுமியிடம் அறிமுகமாகி உள்ளார். பின்னர் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கவுதமை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story