அாியலூாில் பெண் குழந்தைகள் தின விழா
அாியலூாில் பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வருங்காலத்தில் சாதனைப் பெண்மணிகளாக உருவாக வேண்டும் என்ற வழிகாட்டுதலும், மேலும் கேடயம் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஏராளமான பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story