முத்துப்பேட்டை அருகே மின்கம்பத்தில் வேன் மோதி 17 பேர் காயம்


முத்துப்பேட்டை அருகே மின்கம்பத்தில் வேன் மோதி நிற்பதை படத்தில் காணலாம்.
x
முத்துப்பேட்டை அருகே மின்கம்பத்தில் வேன் மோதி நிற்பதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 25 Jan 2021 10:57 AM IST (Updated: 25 Jan 2021 10:57 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணிக்கு வந்து விட்டு திரும்பி சென்ற போது முத்துப்பேட்டை அருகே வேன், மின்கம்பத்தில் மோதி 17 பேர் காயம் அடைந்தனர்.

மின் கம்பத்தில் வேன் மோதியது
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் களவன்திட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (40) என்பவர் தனது குடும்பத்தினர் 17 பேருடன், ஒரு வேனில் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து நேற்று காலை சொந்த ஊருக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் ஆலங்காடு கந்தபரிச்சான் ஆற்றின் பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் வேன் மோதியது.

17 பேர் காயம்
இந்த விபத்தில் வேன் டிரைவர் எட்வின்ஜெபராஜ் மற்றும் சந்தோஷ் குடும்பத்தினர் 17 பேர் காயம் அடைந்தனர். அப்போது அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story