மழையில் சேதமடைந்த பயிர்களுடன், தென்காசி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை.
மழையில் சேதம் அடைந்த பயிர்களுடன் தென்காசி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
மழையில் சேதமடைந்த பயிர்களுடன் தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு வழங்கினர்.
விவசாயிகள் முற்றுகை
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர். கலெக்டர் சமீரன் காணொலிக்காட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமையில் விவசாயிகள், மழையால் அழுகி சேதமடைந்த பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு வழங்கினர். அதில், ‘திருவேங்கடம் தாலுகாவை சேர்ந்த மைப்பாறை, நடுவப்பட்டி, வரகனூர் ஆகிய கிராமங்களில் மழையால் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். மேலும் உடனடியாக விவசாய குடும்பத்தினருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சாதி சான்றிதழ் கேட்டு...
புளியங்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், ‘பழங்குடி இனமான காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக புளியங்குடி 1-வது வார்டில் வசித்து வருகிறோம். எங்களுடைய குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கிைடக்கப் பெறாததால் உயர்கல்வி படிக்க இயலாத நிலை உள்ளது.
எனவே எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.
Related Tags :
Next Story