பிளாஸ்டிக் பாட்டில்களை துகளாக்கும் எந்திரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்தார்


பிளாஸ்டிக் பாட்டில்களை துகளாக்கும் எந்திரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 26 Jan 2021 7:27 AM IST (Updated: 26 Jan 2021 7:27 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் ரூ.3 லட்சத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை துகளாக்கும் எந்திரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் பெருநகராட்சியும், தனியார் நிறுவனமும் இணைந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.3 லட்சத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை துகள்கள் ஆக்கி மறுசுழற்சி செய்யும் எந்திரத்தை, காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதனால் காஞ்சீபுரம் பெருநகராட்சியை பிளாஸ்டிக் இல்லா நகரை உருவாக்கும் முயற்சியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த எந்திரம் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களை துகள்களாக்கும் திறன் கொண்டது. இந்த இயந்திரத்தின் மூலம் 15 கிலோ வரை பிளாஸ்டிக் துகள்கள் சேமிக்கப்படும். பிறகு இப்பிளாஸ்டிக் துகள்களை பிளாஸ்டிக் தயாரிப்பு சங்கத்துக்கு மறுசுழற்ச்சிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் வட்டாட்சியர் பவானி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story