அரியலூரில் குடியரசு தின விழா


அரியலூரில் குடியரசு தின விழா
x
தினத்தந்தி 27 Jan 2021 7:55 AM IST (Updated: 27 Jan 2021 7:57 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர்,

அரியலூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழா

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் ரத்னா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சமாதான புறாக்களை பறக்கவிட்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களை பறக்க விட்டார்.
இதைத்தொடர்ந்து 28 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கமும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த மொத்தம் 348 பேருக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கி பாராட்டினார். பின்னர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

தியாகி கவுரவிப்பு

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி முத்துகுமாரசாமியின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்று, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. விழாவில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியர் ஜோதி பூங்கோதை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு கோதண்டராமசாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Next Story