கீழப்பழுவூா் பகுதியில் மாரியம்மன், மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கீழப்பழுவூா் பகுதியில் மாரியம்மன், மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தில் புதிதாக மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. கோவிலில் விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன், வீரபத்திரர், கருப்புசாமி, மதுரை வீரன் உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளியுள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, புண்யாகவாஜனம் ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் முதல் கால யாகசாலை பூஜையும், நேற்று காலை இரண்டாம் கால பூஜைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் குலமாணிக்கம் கிராமத்தில் மீனாட்சி அம்மன், சன்னாசியார், மதுரை வீரன் மற்றும் பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ள கோவில் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்று, முதல் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story