சோழிங்கநல்லூர் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் பிரதான சாலை சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சோழிங்கநல்லூர்,
சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் பிரதான சாலை சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை போராடி அணைக்க முயன்றனர்.
ஆனால் தீ அணைக்க முடியாததால் மேலும் சிறுசேரி சிப்காட், மேடவாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 1½ மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஐ.டி. நிறுவனத்தின் அருகே உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story