ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் மோதி பள்ளி மாணவர் பலி பிறந்தநாளையொட்டி கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்
ஊத்துக்கோட்டை அருகே பிறந்த நாளையொட்டி மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்ற பள்ளி மாணவர் டிராக்டர் மோதி பரிதாபமாக இறந்தான்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அய்யாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ருக்கு. இவரது மகன் மதன் (வயது 18). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் தன்னுடைய பிறந்த நாளையொட்டி மதன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி கிராமத்தில் உள்ள பெரியப்பா கட்டையன் வீட்டுக்கு சென்றான். அவரிடம் ஆசி பெற்ற பின் மோட்டார் சைக்கிளில் செங்கரை பகுதியில் உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலுக்கு புறப்பட்டார்.
கோவிலை நெருங்கும் போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது.
மாணவர் சாவு
இதில் மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக நொறுங்கியது. படுகாயம் அடைந்த மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்- இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story