ரூ.3 கோடியே 17 லட்சத்தில் கட்டப்படும் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணியை மாநில தரக்கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ரூ.3 கோடியே 17 லட்சத்தில் கட்டப்படும் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணியை மாநில தரக்கண்காணிப்பு அலுவலர் எபினேசர் ராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடவாசல்,
குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3 கோடியே 17 லட்சம் செலவில் ்புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாநில தரக்கண்காணிப்பு அலுவலர் எபினேசர் ராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கட்டுமான பணிக்கு உப்பு சத்து இல்லாத தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
மேலும் 100 சதவீதம் தரமான முறையில் பணிகள் நடைபெற வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிட பணிகளை முடிக்கும் வகையில் அதிகாரிகள் பணிகளை நேரில் கண்காணிக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது மாவட்ட உதவி செயற்பொறியாளர் கண்ணன், ஒன்றிய என்ஜினீயர்கள் வெங்கடேசன், வினோத்குமார், ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story