டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து திருவாரூரில், மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தபட்டதை கண்டித்து திருவாரூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். டெல்லியில் உரிமைக்காக டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் திருவாரூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து
திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்துல்லா முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர் முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட செயலாளர் நஜ்முதீன் நன்றி கூறினார். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story