பசு மாட்டை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி


பசு மாட்டை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 29 Jan 2021 12:46 AM IST (Updated: 29 Jan 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கரை அருகே பசு மாட்டை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது.

கோவை மதுக்கரை வனச்சரகத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுக்கரை காந்தி நகரில் புகுந்த சிறுத்தைப்புலி 4 ஆடுகளை அடித்துக்கொன்றது. இதையடுத்து மட்டப்பாறை தோட்டத்தில் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மாவுதம்பதி கிராமத்தில் உள்ள குருசாமி என்பவர் தோட்டத்திற்குள் சிறுத்தைப்புலி புகுந்தது. பின்னர் சிறுத்தைப்புலி அங்கு கட்டப்பட்டிருந்த பசு மாட்டை அடித்துக்கொன்றது.  அப்போது சத்தம் கேட்டு குருசாமி  அங்கு வந்தார் அதற்குள் சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதுகுறித்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும் பசு மாட்டை அடித்துக்கொன்றது சிறுத்தைப்புலி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அண்ணாநகர் பகுதியில் சிறுத்தைப்புலியை பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. சிறுத்தைப்புலியின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Next Story