வி.கைகாட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா


வி.கைகாட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
x
தினத்தந்தி 29 Jan 2021 7:07 AM IST (Updated: 29 Jan 2021 7:11 AM IST)
t-max-icont-min-icon

வி.கைகாட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடைபெற்றது.

வி.கைகாட்டி:

வி.கைகாட்டியில் அரியலூர் சாலையில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 32-ம் ஆண்டு பால்குட திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் முட்டுவாஞ்சேரி சாலையில் அழகனேரி ஓடைப்பாலத்தில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் அலகு குத்தியும், தீச்சட்டி, பால்குடம், காவடி மற்றும் பாடைவாகனம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story