அந்தியூர் அருகே கல்குவாரியில் பதுக்கிய டெட்டனேட்டர்- வெடிமருந்து பறிமுதல்; பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
அந்தியூர் அருகே கல்குவாரியில் பதுக்கி வைக்கப்பட்ட டெட்டனேட்டர் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அந்தியூர் அருகே கல்குவாரியில் பதுக்கி வைக்கப்பட்ட டெட்டனேட்டர் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரகசிய தகவல்
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் பெஜிலட்டி மலைக்கிராமம் உள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக இயங்காத கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் உரிய அனுமதியின்றி பாதுகாப்பு இல்லாமல் வெடிமருந்துகள் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டு உள்ளதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் பர்கூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தனிப்பிாிவு போலீஸ் முருகன், தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கல்குவாரியின் ஒரு பகுதியில் வெடிமருந்துகள் குழிதோண்டி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதை கண்டுபிடித்தனர்.
டெட்டனேட்டர்
இதைத்தொடர்ந்து வெடிமருந்து நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் குழி தோண்டப்பட்டது.
அப்போது பிளாஸ்டிக் சாக்கு மற்றும் அட்டை பெட்டிகளில் 500 கிலோ வெடிமருந்து, 500 கிலோ தோட்டா, 1,000 டெட்டனேட்டர், 150 டெட்டனேட்டர் கேப், 16 திரிகள் மற்றும் வெடிமருந்துகள் வெடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள் ஆகியவை கிடைத்தன.
பறிமுதல்
உடனே அவைகளை போலீசார் அங்கிருந்து பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளரான கோபி துளசி நகரை சேர்ந்த சுமதி மற்றும் கல்குவாரியில் பணியாற்றிய மேலாளர் முருகேசன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story