கோவையில் தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் குடிபோதையில் நண்பரே கொன்றது அம்பலம்


ரமேஷ் கண்ணன்
x
ரமேஷ் கண்ணன்
தினத்தந்தி 30 Jan 2021 5:11 AM IST (Updated: 30 Jan 2021 5:11 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் குடிபோதையில் நண்பரே கொன்றது அம்பலம்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் ஜோதி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் கண்ணன் (வயது 40) என்பவரும் நண்பர்கள்.

 இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தொழிலாளியின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.

 இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் தொழிலாளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று சுப்பிரமணியன், ரமேஷ் கண்ணன் இரவு மதுகுடித்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

 இதில் ரமேஷ் கண்ணன் குடிபோதையில், சுப்பிரமணியத்தை அடித்து கொன்றது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் ரமேஷ் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story