பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை


பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 30 Jan 2021 5:18 AM IST (Updated: 30 Jan 2021 5:18 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை;சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு

கொளத்தூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பாலியல் பலாத்காரம்
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தெலுங்கனூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவள் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், அந்த சிறுமியை நைசாக பேசி அவனுடைய தாத்தா வீட்டிற்கு அழைத்து சென்றதும், அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

மேலும், சிறுமியின் உடலை பிளேடால் அறுத்ததோடு உடலை அருகில் இருந்த அலுமினிய அண்டாவில் வைத்து துணிகளை போட்டு மூடியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இதனிடையே இந்த வழக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி சேலம் மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 

சிறையில் அடைப்பு
அப்போது, சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமார் தீர்ப்பு கூறினார். அதாவது, சிறுமி கொலை வழக்கில் 2019-ம் ஆண்டு சிறை தண்டனை வழங்கும்போது சிறுவனுக்கு 18 வயது என்பதால், 21 வயது வரைக்கும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்க வேண்டும் எனவும், அதன்பிறகு 21 வயது பூர்த்தி அடைந்தவுடன் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும், அதேசமயம், சிறுவனின் நன்னடத்தை அடிப்படையில் நீதிபதி முடிவு செய்வார் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் சிறுமி கொலை வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி முருகானந்தம் முன்னிலையில் ஏற்கனவே சிறுவனாக இருந்து தற்போது 21 வயதான கொளத்தூரை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்த திருமூர்த்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும், ஏற்கனவே சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்த நாட்களை கழித்து இதர நாட்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி முருகானந்தம் கூறினார். இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
---

Next Story