அரியலூா் கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு அளிக்கும் போராட்டம்
அரியலூா் கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.
அரியலூர்:
தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அரியலூரில் பா.ம.க. சார்பில் மணி அடித்து சங்கொலி எழுப்பி கலெக்டா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதையொட்டி காமராஜர் திடலில் இருந்து மாநில துணை பொது செயலாளர் திருமாவளவன், மாநில துணை தலைவர் சின்னதுரை தலைமையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் கட்சிக்கொடி மற்றும் வன்னியர் சங்க கொடி ஏந்தி, சங்கொலி எழுப்பி மணி அடித்தபடி திருச்சி ரோடு, சத்திரம், எம்.பி.கோவில் தெரு, மார்க்கெட் தெரு வழியாக ஊர்வலமாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு, கோரிக்கையை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னாவிடம் மனு கொடுத்தனர். போராட்டத்தில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் தாங்கள் உறுப்பினராக உள்ள கட்சி கொடியுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story