அாியலூாில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அாியலூாில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
தாமரைக்குளம்:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் நேற்று அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் லதா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story