ஆரணி, மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்


ஆரணி, மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Jan 2021 6:30 PM IST (Updated: 30 Jan 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆரணி,

ஆரணி பகுதியில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மேற்பார்வையில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், தரணிகுமார் மற்றும் போலீசார் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர். 

அப்போது விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் கடத்தி வரப்பட்டது. போலீசாரை பார்த்ததும் டிராக்டரை சாலையிலேயே நிறுத்திவிட்டு அதனை ஓட்டி வந்தவர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அந்த டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக உரிமையாளர் தங்கதுரையை போலீசார் தேடி வருகின்றனர். 

இதேபோல ஆரணி- தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் தச்சூர் அருகே ரோந்து மேற்கொள்ளும்போது அடையபுலம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கு சொந்தமான டிராக்டரும், ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் வடுகசாத்தை சேர்ந்த வேலன் ஆகியோரும் ஓட்டி வந்த டிராக்டரும் மணல் கடத்தி வந்தது. 

போலீசாரை பார்த்ததும் 2 டிராக்டர்களில் வந்தவர்களும் டிராக்டர்களை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து ஆரணி தாலுகா 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story