கோவில்பட்டியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கோவில்பட்டியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்ட தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் கலெக்டர் செந்தில்ராஜ், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் யமுனா ஆகியோரின் அறிவுரையின்படி கோவில்பட்டி நகர் நல மையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா நேற்று நடைபெற்றது.
மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட சுகாதார ஆய்வாளர் செண்பகமூர்த்தி, சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வசித்தனர். மருந்தாளுனர் மகாராசி வரவேற்றார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ஆண்டு தோறும் ஜனவரி 30-ந் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டியில் தொழுநோய் உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். தொழு நோய் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழுநோய் இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் நடராஜன், லேப் டெக்னீசியன் மகேஸ்வரி, நகர சுகாதார செவிலியர்கள் மகாலட்சுமி, கோமதி அம்மாள், லலிதா, சுதா, சகுந்தலா, பணியாளர் சங்கரேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், செவிலியர் அனிதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story