காந்தி நினைவு நாள்: சமூக ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு
சமூக ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
தூத்துக்குடி,
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி 1-ம் கேட் காந்தி சிலை முன்பு சி.ஐ.டி.யு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிற்சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில், சமூக ஒற்றுமையை வலியுறுத்தியும் வன்முறைக்கு எதிராகவும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி உருவசிலைக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சுமுத்து, மாவட்ட துணை தலைவர்கள் பொன்ராஜ், சங்கரன், மாவட்ட இணை செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாநகர செயலாளர் காஸ்ட்ரோ, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன், மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story