அாியலூா் மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்


அாியலூா் மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
x
தினத்தந்தி 30 Jan 2021 10:12 PM GMT (Updated: 30 Jan 2021 10:12 PM GMT)

அாியலூா் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது.

இளம்பிள்ளைவாதம் நோயை ஒழிக்க அரியலூர் மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 68 ஆயிரத்துக்கு 570 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் அரியலூர் நகர்ப்பகுதியில் 47 மையங்களிலும், ஊரக பகுதிகளில் 501 மையங்களிலும் என மொத்தம் 548 மையங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்தும் வழங்கும் முகாமில் 2 ஆயிரத்து 148 பணியாளர்கள் பணிபுரியவுள்ளனர்.

Next Story