சென்னை-ஜோலார்பேட்டைக்கு 9 மாதங்களுக்கு பிறகு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்


சென்னை-ஜோலார்பேட்டைக்கு 9 மாதங்களுக்கு பிறகு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 30 Jan 2021 10:28 PM GMT (Updated: 30 Jan 2021 10:28 PM GMT)

சென்னை-ஜோலார்பேட்டைக்கு 9 மாதங்களுக்கு பிறகு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.

கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் ெரயில் போக்குவரத்தும் சீரடைந்துள்ளது. கொரோனா பரவலால் நிறத்தப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் 9 மாதங்களுக்கு பிறகு நாளை (திங்கட் கிழமை) முதல், இயக்கப்பட உள்ளது. 

ஏலகிரி எக்ஸ்பிரஸ் முற்றிலும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரெயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் எண்: 06089 சென்னையில் இருந்து நாளை மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, குடியாத்தம், வாணியம்பாடி வழியாக 15 இடங்களில் நின்று இறுதியாக இரவு 10.30 மணிக்கு ஜோலார்பேட்டையை அடைகிறது.

அதேபோல் மறு மார்க்கத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் எண்:06090 ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு காலை 9.20 மணிக்கு சென்னையை அடைகிறது. 

அதில் சாதாரண இருக்கை பெட்டிகள் 19, முதல் வகுப்பு இருக்கை ஒரு பெட்டி என மொத்தம் 20 பெட்டிகள் இயக்கப்பட்டுள்ளன.ஏலகிரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story