தமிழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2-ந் தேதி மறியல் - சிறை நிரப்பும் போராட்டம்; மாநில செயற்குழுவில் முடிவு


கூட்டத்தில் சங்கத்தலைவர் மு.சவுந்தரராஜன் பேசிய போது எடுத்தபடம். திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜன் மற்றும் மாநில
x
கூட்டத்தில் சங்கத்தலைவர் மு.சவுந்தரராஜன் பேசிய போது எடுத்தபடம். திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜன் மற்றும் மாநில
தினத்தந்தி 30 Jan 2021 11:26 PM GMT (Updated: 30 Jan 2021 11:26 PM GMT)

தமிழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வருகிற 2-ந் தேதி மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜன் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் சிவக்குமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். பொதுச்செயலாளர் செல்லையா அறிக்கை வாசித்தார். பொருளாளர் பட்டாபிராமன் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

தமிழகம் முழுவதிலும் இருந்து 30 மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்று, அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விவாதித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு, சர ண் விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் ஆகியவற்றை மீள வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வருகிற 2-ந் தேதி முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது என்றும், அதில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துரை ஊழியர் சங்கம் முழுமையாக கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இளநிலை ஆய்வாளராக இருந்து முதுநிலை ஆய்வாளராக பதவி உயர்வு செய்யும்போது பதவி உயர்வு மூலம் 25 சதவீதமும், நேரடி நியமனம் மூலம் 75 சதவீதம் என்பதை மாற்றம் செய்து தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க ஆணைப்பிறப்பித்த முதன்மை செயலாளர், பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வது.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ம் கட்டமாக வருகிற 15-ந் தேதி கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவது மற்றும் மின்னஞ்சல் மூலமாக அதிகாரிகளுக்கு முறையீடு செய்வது என்றும், மார்ச் 12-ந் தேதி மாநில பதிவாளர், துறை செயலாளர் ஆகியோரிடம் மாவட்ட நிர்வாகிகள் முறையிடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story