வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2021 11:09 AM IST (Updated: 31 Jan 2021 11:09 AM IST)
t-max-icont-min-icon

பழவூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடக்கன்குளம்:
பழவூர் அருகே கூட்டப்பள்ளி சுனாமி காலனியை சேர்ந்தவர் சூசை அந்தோணி மகன் ரீகன் ரஞ்சித் (வயது 35). திருமணம் ஆகாததால் விரக்தி அடைந்த அவர், மீன் பிடிப்பதற்காக போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பழவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரின் உடலை கைப்பற்றி நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story