விசுவக்குடி அணையில் சேதமடைந்த கரைப்பகுதிகள் சீரமைப்பு


விசுவக்குடி அணையில் சேதமடைந்த கரைப்பகுதிகள் சீரமைப்பு
x
தினத்தந்தி 31 Jan 2021 5:43 AM GMT (Updated: 31 Jan 2021 5:43 AM GMT)

விசுவக்குடி அணையில் சேதமடைந்த கரைப்பகுதிகள் சீரமைக்கப்பட்டது.

வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரிக்கரை உடைந்து ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி வீணானது. இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் அணையின் கரைகள் பலவீனமாக உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அதன்படி விசுவக்குடி அணையில் கரையின் மேல் பகுதியில் ஒரு சில இடங்களில் கரைகள் சேதமடைந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக விசுவக்குடி அணையின் மேல் பகுதி கரையில் உள்வாங்கிய பகுதிகளில் இருந்த பழைய மண்ணை அகற்றி விட்டு, அந்த இடத்தில் புதிதாக மண் நிரப்பி சீரமைத்து, அணையின் கரைகள் பலப்படுத்தப்பட்டன.

Related Tags :
Next Story