சவுமியநாராயணபெருமாள், கோதை நாச்சியார் திருக்கல்யாணம்


திருக்கல்யாண கோலத்தில் காட்சி தரும் சவுமியநாராயண பெருமாள், கோதைநாச்சியார்.
x
திருக்கல்யாண கோலத்தில் காட்சி தரும் சவுமியநாராயண பெருமாள், கோதைநாச்சியார்.
தினத்தந்தி 31 Jan 2021 11:26 AM IST (Updated: 31 Jan 2021 11:26 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள், கோதை நாச்சியார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர்,

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள், கோதை நாச்சியார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சவுமிய நாராயண பெருமாள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமியநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோதை நாச்சியார் தைலக்காப்பு உற்சவம் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு திருமஞ்சன பூஜைகள் நடைபெற்றன.
 விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சவுமியநாராயண பெருமாளும், கோதை நாச்சியாரும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு பெரியாழ்வார் எதிர்கொண்டு அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.சீர்வரிசை பொருட்கள் எடுத்து வருதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
திருக்கல்யாணம்

 பின்னர் பாசுரம் பாடி சவுமியநாராயணபெருமாளுக்கும், கோதை நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.
1 More update

Related Tags :
Next Story