சென்னை எழும்பூர்-புதுச்சேரி சிறப்பு ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு


சென்னை எழும்பூர்-புதுச்சேரி சிறப்பு ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2021 3:28 PM IST (Updated: 31 Jan 2021 3:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் சிறப்பு ரயில் இன்று 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஜூன் மாதம் முதல் மத்திய, மாநில அரசுகள் மாதந்தோறும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தன.

இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் முதல் சென்னையிலிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் ரயில் போக்குவரத்து சேவை படிப்படியாக தொடங்கப்பட்டது. அந்த வகையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். இந்த நிலையில் செங்கல்பட்டு ரயில்வே பணிமனையில் நடைபெறும் மின்சார பராமரிப்பு பணி காரணமாக இந்த சிறப்பு ரயில் இன்று 30 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Next Story