வேலூர், 24 பேருக்கு கொரோனா


வேலூர், 24 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 Jan 2021 6:54 PM IST (Updated: 31 Jan 2021 6:54 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.  மாவட்டம் முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட சளிமாதிரி பரிசோதனையின் முடிவில் மேலும் 24 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. 

அதைத் தொடர்ந்து அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  24 பேரின் குடும்பத்தினர், உடன் பணிபுரிந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story