அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
அரக்கோணத்தில் அரசு அதிகாரி வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அரக்கோணம்
அரக்கோணம், ரத்தன்சந்த் நகரை சேர்ந்தவர் கோபி, இவர் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் தணிக்கை பிரிவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து வைத்து இருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு கோபியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கோபி வீட்டில் இருந்தார். வீட்டுக்குள் சென்ற லஞ்சஒழிப்பு போலீசார் அவருடைய வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.
மதியம் 1.30 மணிவரை நடத்திய சோதனையில் 6 வங்கிக் கணக்கு புத்தகங்கள், ரூ. 85 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான 10 இதர ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் விசாரணைக்கு வரும்படி கோபியை அழைத்துள்ளனர். அரக்கோணத்தில் அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கோடிக்கணக்கான சொத்து ஆவணங்களை கைப்பற்றிய சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story