கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி


கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி
x
தினத்தந்தி 31 Jan 2021 10:30 PM GMT (Updated: 31 Jan 2021 4:26 PM GMT)

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.  இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.  இந்த நிலையில்  கடந்த 10 மாதங்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். 

மேலும் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

Next Story