பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கோட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி தலைமை அஞ்சலக அலுவலகத்தில், அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு கோட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. முன்னாள் உதவி தலைவர் மாரிமுத்து கொடி ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். கோட்ட உதவி செயலாளர் ஜாக்குலின், கோட்டத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், காளீஸ்வரன், ஜேக்கப் குருபாதம், செயலாளர்கள் சமுத்திரபாண்டியன், யோசுவா, முனியசாமி ஆகியோர் வரவேற்றார்கள்.
கூட்டத்தில் முன்னாள் தமிழ் மாநில செயலாளர் உதயகுமாரன், மத்திய மண்டல செயலாளர் சுதீபஷ்குமார், மாநில உதவி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். பணியிட மாறுதலுக்கு பெண்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.
கமலேஷ் சந்திரா அறிக்கையில் கூறியுள்ளபடி கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கான சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும். அஞ்சல் துறையில் காலியிட பணிகளை உடனடியாக நிரப்ப வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பயன்களை ஓய்வு பெறும் நாளில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story