துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 31 Jan 2021 5:44 PM GMT (Updated: 31 Jan 2021 5:52 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே பாக்கம் கிராமம் ஏரிக்கரை அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, முதல் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் நேற்று காலை 2-வது கால யாக பூஜை நடபெற்று யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணிக்கு கோவில் கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
இதில் பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து இரவு அம்மன் வீதிஉலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். 

Next Story