நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2021 11:07 PM GMT (Updated: 31 Jan 2021 11:09 PM GMT)

நெல்லை டவுனில் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை,

நெல்லை டவுன் வாகையடி முக்கு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகரில் சேதம் அடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், பொதுமக்கள் படும் அவதியை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். நெல்லை தாலுகா செயலாளர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு சாலையை சீரமைக்க வலியுறுத்தி பேசினார்கள்.

Next Story