தரையில் கிடக்கும் போலீஸ் நிலைய பெயர்ப்பலகை


தரையில் கிடக்கும் போலீஸ் நிலைய பெயர்ப்பலகை
x
தினத்தந்தி 1 Feb 2021 1:20 AM GMT (Updated: 2021-02-01T06:54:29+05:30)

தரையில் கிடக்கும் போலீஸ் நிலைய பெயர்பலகை சீர் செய்து பொருத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்,

கரூர் நகரப்பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் கரூர், தாந்தோணிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம் உள்ளிட்ட நான்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் எந்த எந்த பகுதி எந்த போலீஸ் நிலையத்தின் கீழ் வருகிறது என்பதை பொது மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் போலீஸ் நிலையம் குறித்து பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் லைட்ஹவுஸ் அருகே உள்ள அமராவதிபாலத்தின் ஒரு பகுதி கரூர் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டிலும் மற்றொரு பகுதி பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இதை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த எல்லை குறித்தான பெயர் பதாகையை தாங்கிய இருப்பு கம்பி சாய்ந்ததால் பாலத்தின் நடைபாதையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாலத்தில் நடந்து செல்பவர்களுக்கும் நடை பயிற்ச்சி மேற் கொள்ளும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள இரும்பு பதாகையை அப்புறப்படுத்துவதுடன் மீண்டும் சீர் செய்து பொருத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Next Story