கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

கொடைக்கானல் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்,
மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் கொடைக்கானல் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று(திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி தரைப்பகுதியில் இருந்து பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், தட்டுகள், டம்ளர்கள், விரிப்புகள், கவர்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்காக வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் வருகிற 8-ந்தேதி முதல் கொடைக்கானல் நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்து இருப்பதோ, விற்பனை செய்வதோ கூடாது என்றும் இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story