மொபட் மீது லாரி மோதியதில் தச்சு தொழிலாளி பலி


மொபட் மீது லாரி மோதியதில் தச்சு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 1 Feb 2021 5:25 AM GMT (Updated: 2021-02-01T11:00:48+05:30)

மொபட் மீது லாரி மோதியதில் தச்சு தொழிலாளி பாிதாபமாக இறந்தாா்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் க.எறையூரை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 52). தச்சு தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மொபட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த சின்னசாமியை (34) கைது செய்தனர்.

Next Story