சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவர் கைது


சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2021 5:42 AM GMT (Updated: 2021-02-01T11:15:59+05:30)

சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி,

ராமநாதபுரம் மாவட்டம் வீரநல்லூரை சேர்ந்தவா் முகைதீன் (வயது 51). இவர் சென்னையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அதே ரெயிலில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பசீர்அகமது முன்பதிவு செய்யாமல் பரமக்குடியில் ரெயிலில் ஏறியுள்ளார். இந்த ரெயில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தது. அப்போது பஷீர்அகமது இறங்கும் போது அருகில் அமர்ந்திருந்த முகைதீனுக்கு சொந்தமான மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் இருந்த பையை திருடிக்கொண்டு இறங்கினார். இதை அறிந்த முகைதீன் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் பஷீரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Next Story