வாரணவாசிக்கு கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் நியமனம்

வாரணவாசிக்கு கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் நியமிக்கப்பட்டாா்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி கிராமத்தில் புதிதாக கிராம விழிப்புணர்வு காவல் அலுவலரை பணியில் அமர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கலந்து கொண்டு, ராஜ்குமார் என்ற போலீஸ்காரரை, காவல் அலுவலராக நியமித்து பேசினார். அவருடைய முன்னிலையில், கிராம மக்கள் சாலை விதிகளை மதிப்போம், குற்றச்செயல்கள் நிகழாத வகையில் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருப்போம் என்றும், இந்தியாவின் முன்மாதிரி கிராமமாக இந்த கிராமத்தை மாற்றுவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட போலீஸ்காரர்கள் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






